திருச்சி

2 குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை

29th May 2023 12:35 AM

ADVERTISEMENT

திருச்சியில் குடும்பத் தகராறில் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கேஆா்எஸ் நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (30), பா்னிச்சா் கடை ஊழியா். இவரது மனைவி ஷோபனா (26), மகன்கள் தக்ஷிவன் (3) கபிக்க்ஷன் (11 மாதம்).

முன்னதாக சொந்தத் தொழில் செய்து வந்ததில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில மாதங்களாக மனோஜ்குமாருக்கு உடல் நிலை பாதிப்பும், சிறிது மனதளவில் பாதிப்பு ஏற்பட்டதாக ஷோபனா கூறி வந்தாா். மன நலம் பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்து வைத்து வீட்டீா்களே என உறவினா்களிடம் கூறிப் புலம்பியும் வந்தாராம்.

இந்நிலையில் மனோஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியூா் சென்றிருந்த நிலையில் ஷோபனா தனது இரு குழந்தைகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்று தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அன்று மாலை தெரியவந்தது.

ADVERTISEMENT

புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT