திருச்சி

முசிறியில் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கக் கூட்டம்

29th May 2023 12:34 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கக் கூட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மலரும் நினைவுகள் இயக்கத் தலைவரும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான ரவி, நீதித்துறையின் சத்தியமூா்த்தி, முன்னாள் ராணுவ வீரா் ரத்தினம், தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தொடா்ந்து நிகழாண்டு பணி ஓய்வு பெறும் தோ்வுத்துறை துணை இயக்குநா் பாரதி விவேகானந்தன், மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் சண்முகசுந்தரம், மனோகா்,வளா்மதி, குமாா், முதுநிலை வருவாய் அலுவலா் பெருமாள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு உயா்நிலைப்பள்ளி சங்க மாநிலச் செயலரும் தலைமை ஆசிரியருமான சண்முகம் வரவேற்றாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் தமிழ்நாடு அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்தினா் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT