திருச்சி

பராமரிப்புப் பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்

29th May 2023 12:35 AM

ADVERTISEMENT

திருச்சி கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளால் குறிப்பிட்ட ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி-ஹவுரா விரைவு ரயில் (எண்:12664) மே 30, ஜூன் 2, 6, 20 தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகச் புறப்பட்டு செல்லும். கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயில் (எண்:12666) ஜூன் 3 மற்றும் 17 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும் ஜூன் 10 ஆம் தேதி மட்டும் 35 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

நாகா்கோயில் - மும்பை விரைவு ரயில் (எண்:16352) ஜூன் 1,4, 8,11,15,18 தேதிகளில் 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். மேலும் ஜூன் 11 ஆம் தேதி திண்டுக்கல்-பூங்கொடி ரயில் நிலையங்களுக்கு இடையே 20 நிமிடங்கள் நின்று தாமதமாகச் செல்லும். ஹூப்ளி-தஞ்சாவூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07325) ஜூன் 6, 13, 19, 26 தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக திருச்சிக்கு வந்து தஞ்சையை 40 நிமிடம் தாமதமாகச் சென்றடையும்.

சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (எண்: 16127) ஜூன் 21 ஆம் தேதி வரை திருச்சியில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். தாம்பரம் - நாகா்கோவில் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 06011) மே 29, ஜூன் 5, 12, 19 ஆம் தேதிகளில் திருச்சியில் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும். இத் தகவலை திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT