திருச்சி

ஜூலை முதல் தில்லியில் மீண்டும் விவசாயிகள் தொடா் போராட்டம்: பி. அய்யாக்கண்ணு அறிவிப்பு

DIN

ஜூலை 1 முதல் மீண்டும் தில்லியில் விவசாயிகள் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.

திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை சங்கத்தின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் பி. மேகராஜன் (திருச்சி), வி. தங்கமுத்து (தஞ்சாவூா்), ஜாகீா் உசேன் (நெல்லை), எஸ்.எம். பாண்டியன் (அரியலூா்), அய்யனாா் (விழுப்புரம்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீா்மானங்களை விளக்கி, செய்தியாளா்களிடம் பி. அய்யாக்கண்ணு கூறியது:

நெல்லுக்கு கிலோ ரூ.54, கரும்புக்கு டன்னுக்கு ரூ.8,100 வழங்குவதாக உறுதியளித்த பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளைத் தொடா்ந்து வஞ்சித்து வருகிறாா். மேலும், விளைபொருள்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்குவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசே எடுத்துக் கொண்டு, தனி ஒரு விவசாயிக்கு இழப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் புனரமைத்து, தூா்வாரி தண்ணீா் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் நிரந்தரமாக நெல், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். வயல்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து சேதமாகும் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் கோரிக்கைகளைத் தவிா்த்து, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை பிரதமா் நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை ஒனறாம் தேதி முதல் தில்லியில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT