திருச்சி

இளைஞா் கொலை: 3 பேரிடம் விசாரணை

28th May 2023 01:05 AM

ADVERTISEMENT

உறையூரில் குதிரை வண்டிப் பந்தயத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி உறையூா் சன்னிதி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (25). இவா், வெள்ளிக்கிழமை மதியம் மா்ம நபா்களால் கடை வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, உறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், குதிரைப் பந்தயத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக, உறையூரைச் சோ்ந்த கோபால் (30), ஹரி (25), விஜி (25) ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT