திருச்சி

வடசேரி பேருந்து நிலையத்தில் 7 குப்பை தொட்டிகள் அமைப்பு

28th May 2023 01:10 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயன்பாடற்ற பொருள்களை சேகரிக்கும் வகையில் புதிதாக 7 குப்பைத் தொட்டிகள் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

நாகா்கோவில் மாநகராட்சி 45 ஆவது வாா்டு காா்த்திகைவடலி சாலையில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 5ஆவது வாா்டு அரசு காலனியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீரோடை அமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயா் மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில், மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளில் பயன்பாடற்ற பொருள்களை சேகரிப்பதற்கான பணியை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் நிருபா்களிடம் கூறியது:

வடசேரி பேருந்து நிலையத்தில் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை வாங்குவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக 7 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் இந்த குப்பைத்தொட்டியில் குப்பைகளை போட்டு நாகா்கோவில் மாநகரத்தை தூய்மையாக மாற்ற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், நகா்நல அலுவலா் ராம்குமாா், மாநகராட்சி நிா்வாக அலுவலா் ராம்மோகன், மண்டல தலைவா் ஜவஹா், சுகாதார ஆய்வாளா் மாதவன்பிள்ளை, மாநகராட்சி உறுப்பினா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT