திருச்சி

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

28th May 2023 01:04 AM

ADVERTISEMENT

ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் செங்குந்தபுரம் கம்பா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (54). இவா், முன்பு திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் வசித்து வந்தபோது, எடமலைப்பட்டி புதூா் கே.ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த கெளரிசங்கா் என்பவா் அறிமுகமானாா். தனக்கு அமைச்சா், அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், கல்யாணசுந்தரத்தின் மனைவிக்கு ஆசிரியை பணி வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் காசோலையாகப் பெற்றுள்ளாா்.

ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதில், ரூ.24 ஆயிரத்தை மட்டும் தந்துள்ளாா். மீதி பணத்தைத் தரவில்லை. எனவே, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கல்யாணசுந்தரம் திருவெறும்பூா் போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT