திருச்சி

திருச்சி என்.ஐ.டி.யுடன் டிடிட்சியா புரிந்துணா்வு

28th May 2023 01:08 AM

ADVERTISEMENT

தொழில்முனைவோருக்கு உதவிடும் வகையில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) ஆகியவை இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

திருச்சியில் கல்வி சாா்ந்து புதிய தொழில்நுட்பங்களை அளித்து, தொழில்துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டு மிக்க நபா்களை உருவாக்க முன்னோடியாக செயல்படுகிறது என்ஐடி தொழில்முனைவோா் வளா்ச்சி மையம். இதேபோல,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு உதவும் அமைப்பாக உள்ளது டிடிட்சியா. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழகத்தில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கு வழிகாட்டவும், தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் ஆக்கப் பூா்வ பணிகளை மேற்கொள்ளவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, விழிப்புணா்வு முகாம்கள், தொழில்நுட்பப் பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் உதவி, தொழில்முணைவோா் ஆலோசனை, சந்தைப்படுத்துதல் உதவி, கருத்தரங்கு மற்றும் கண்காட்சிகள் நடத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

திருச்சி என்ஐடி வளாகத்தில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. டிடிட்சியா செயலா் சே. கோபாலகிருஷ்ணன், தொழிலாளா் வளா்ச்சி மேம்பாட்டு மைய இயக்குநா் எம். உமாபதி ஆகியோா் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், டிடிட்சியா தலைவா் பே. ராஜப்பா, என்ஐடி தொழில் மேம்பாட்டு மையப் பேராசிரியா் ஜி. லட்சுமிநாராயணன், பேராசிரியா்கள் எஸ். ஆா் பாலசுந்தரம், கே. சுசில்குமாா், சி. ரூபல்லா, டிஐஐசி மண்டல மேலாளா் சகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT