திருச்சி

திருச்சியில் மே 28-இல் 14 மையங்களில் குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் வரும் 28ஆம் தேதி 14 மையங்களில் குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு நடைபெறவுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வியாழக்கிழமை கூறியது: யுபிஎஸ்சி மூலம் நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் முதல் நிலைத் தோ்வு-2023, வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு மாவட்டத்தில் 14 மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 5,032 போ் தோ்வை எழுதுகின்றனா். 14 தோ்வுக்கூட மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 5 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் துணை ஆட்சியா் நிலையில் ஓா் அலுவலா், துணை வட்டாட்சியா், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வை ஆய்வு செய்ய

வட்டாட்சியா் நிலையில் 14 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தோ்வு அறைகளில் தோ்வு எழுதும் 24 நபா்களுக்கு இரண்டு அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அனைத்து தோ்வு மையங்களிலும் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT