திருச்சி

பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வா் அறிவிப்பாா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

24th May 2023 04:02 AM

ADVERTISEMENT

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பாா் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தேதிகளில் திறக்கப்படும்.

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா். பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால், முதல்வா் அதனை அறிவிப்பாா்.

ADVERTISEMENT

நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, தனியாா் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கு முன்பாக முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளிப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் 185 ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையிலுள்ள தொடக்கப் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நபாா்டு வங்கியிடம் நிதியுதவி பெற்று,

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும். பழுதான பள்ளி கட்டடங்கள் ஒரு மாதத்துக்குள்ளாக புதுப்பிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT