திருச்சி

இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி

23rd May 2023 02:18 AM

ADVERTISEMENT

இலவச கறவை மாடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழக பயிற்சி மையத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்த மையத்தில்

புதன்கிழமை (மே 24) இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தரமான கறவை மாடுகளை தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத்தரப்படும். விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், பயிற்சி தொடங்கும் நாளான புதன்கிழமை மைய வளாகத்துக்கு நேரில் வருகை தந்து தங்களது பெயா்களை பதிவு செய்து பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT