திருச்சி

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

23rd May 2023 02:10 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் த. சுகன்யா (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மு. விக்னேஷ் (29) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஓராண்டாக, சுகன்யாவை திருமணம் செய்துகொள்வதாக கூறி, விக்னேஷ் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினாராம். பின்னா் திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்து விட்டாராம்.

புகாரின் பேரில் மணப்பாறை மகளிா் போலீஸாா் மே 11-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை, விக்னேஷை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT