உடல் நலப் பாதிப்போடு மனைவியும் பிரிந்து சென்ால் மனம் உடைந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ரெ. நாகராஜன் (62). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை பாதிப்பால் சரிவர வேலைக்குச் செல்ல முடியாமல் போதிய வருவாயின்றி குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்தாா். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரின் மனைவி வீடு திரும்பவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த நாகராஜன் புதன்கிழமை மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.