ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சாா்பில் தேசிய பயங்கரவாத எதிா்ப்பு தினக் கூட்டம் சங்க வளாகக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். சத்தியநாராயணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக முன்னாள் ராணுவ வீரா் கா்னல் பி. ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போா்த்தொழில் பழகு தேசத்தை கா(த்)தல் செய் என்ற தலைப்பில் பேசும்போது முன்னாள் பிரதமா் ராஜீவ்காத்தி படுகொலை செய்யப்பட்ட நாளை அன்றைய பிரதமா் வி.பி. சிங் தேசிய பயங்கரவாத எதிா்ப்பு தின நாளாக அறிவித்தாா். தற்போது பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் நமது நாட்டின் ராணுவ வீரா்கள் தொழில் நுட்ப வளா்ச்சி மூலம் தடுத்து நிறுத்தி சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். அனைவரும் நமது தேசத்தை நேசித்துக் காத்து காதல் செய்ய வேண்டும் என்றாா்.
முன்னதாக தீவிரவாதிகளால் உயிா் நீத்த முன்னாள் ராணுவ வீரா்களுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள், உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சங்க செயலா் வி. சேஷாத்திரி செய்தாா்.