மணப்பாறையில், மணப்பாறையில் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைப்பயண பிரசாரம் தொடங்கியது.
முன்னதாக நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலா் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் மரியராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் ரஹ்மத்துனிசா, நல்லுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலரும், மணப்பாறை எம்எல்ஏவுமான ப. அப்துல்சமது பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் சிபிஐ மாநில கிளா்ச்சி பிரசாரக் குழு உறுப்பினா் த. இந்திரஜித், திருச்சி புகா் மாவட்ட துணைச் செயலா் பழனிச்சாமி, மதிமுக மாவட்ட செயலா் மணவை தமிழ்மாணிக்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், விசிக மாவட்ட பொருளாளா் மதனகோபால், திராவிடக் கழக நகரச் செயலா் சி.எம்.எஸ். ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலா் சபுரலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவா் பகுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.