மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த தாளகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ந. தங்கப் பாண்டியன் (35). இவருக்கும் அருகேயுள்ள அணியாப்பூா் சந்தைப்பேட்டை பகுதி போதும்பொண்ணுக்கும் (22) திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் போதும்பொண்ணு தனது தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த தங்கப்பாண்டியன் 8 இடங்களில் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன், காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் தலைமையிலான வையம்பட்டி போலீஸாா் தங்கப் பாண்டியன் சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.