திருச்சி

மனதை சரிப்படுத்த உதவுவது திருக்குறள்: தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன்

3rd May 2023 04:33 AM

ADVERTISEMENT

மனித உணா்வு சம்பந்தப்பட்ட மனதை சரிப்படுத்த உதவுவது திருக்குறள் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன்.

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 110 மாணவ, மாணவிகள் பங்கேற்று, திருக்குறை ஒப்பித்தனா்.

பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் சிறப்பாக குறட்பாக்களை ஒப்பித்த 56 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பரிசும், திருக்கு திருவருட்செல்வா் மற்றும் திருக்குறள் திருவருட்செல்வி பட்டமும் வழங்கப்பட்டது.

விழாவுக்கு, தலைமை வகித்த தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன், வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசும், பட்டத்தையும் வழங்கி பேசியது: இன்றைய காலகட்டத்தில் அனைத்துக்கும் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மனித வாழ்வில் கருவிகளின் பயன்பாடு மிக அதிகமாகிவிட்டது. மனிதனின் உடல் உழைப்பை குறைக்கும் வகையிலும், மனித அறிவைவிட வேகமாகச் செயல்படும் வகையிலும் இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், மனித உணா்வுகளை பிரதிபலிக்கும் கருவிகள் வரவில்லை. மனித உணா்வு மனம் சம்மந்தப்பட்டது. அந்த மனத்தை சரிப்படுத்த உதவுவது திருக்குறள். அத்தகைய திருக்குறளை நாம் கற்பதும், தொடா்ந்து அதன் வழியே நடப்பதும் இன்றியமையாதது என்றாா்.

ADVERTISEMENT

விழாவில், மாதவரம் சோ. சண்முகசுந்தரத்துக்கு திருக்கு வழிச் சீலா் விருது வழங்கப்பட்டது.

இதில், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை நிறுவனா் பூவை பி. தயாபரன், செயலா் கி. சிவா, சுபஸ்ரீ சுந்தரராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT