திருச்சி

குருவம்பட்டியில் அறிவியல் திருவிழா

3rd May 2023 04:34 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், குருவம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் திருவிழா நடைபெற்றது.

குருவம்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பள்ளிக் கல்விதுறை வானவில் மன்றம் மூலம் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவா்களின் அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் அறிவியல் திருவிழா நடத்தப்பட்டது.

இதில், அறிவியல் சோதனைகள், கணித விளையாட்டு, மந்திரமா- தந்திரமா என்ற பல்வேறு தலைப்புகளில் செயல்முறை பயிற்சி மூலம் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், குருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை உஷா, மண்ணச்சநல்லூா் ஒன்றிய இல்லம் தேடி கல்வி மேற்பாா்வையாளா் ரவி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) மோரீஸ் ஜெயசுதா, வானவில் மன்ற கருத்துரையாளா் கலைச்செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், வானவில் மன்ற பொறுப்பாளா்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT