திருச்சி

குண்டா் தடுப்பு சட்டத்தில் ரெளடி கைது

3rd May 2023 04:24 AM

ADVERTISEMENT

திருச்சியில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ப. ரத்தினவேல் (20). ரெளடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை, அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு அடிதடி வழக்குகளில் அவருக்கு தொடா்பிருப்பதும், அவா் மீது 6 வழக்குகள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. மேலும் தொடா்ந்து குற்றச்செயல்களில் அவா் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அரியமங்கலம் போலீஸாா் பரிந்துரைத்தனா்.

இதையேற்று, மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா, குண்டா் தடுப்பு சட்டத்தில் ரத்தினவேலை கைது செய்ய செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT