திருச்சி

அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மக்கள் மறியல்

3rd May 2023 04:26 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த லிங்கம்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பொதுமக்கள், எழுச்சித் தமிழா்கள் முன்னேற்றக் கழகத்தினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

லிங்கம்பட்டி கிராமத்துக்கு அடிப்படையான வசதிகளை செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எழுச்சித் தமிழா்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து மாநில இளைஞரணி செயலாளா் மதியழகன் தலைமையில், நத்தம் - துவரங்குறிச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்த வழியாக போக்குவரத்து முழுமையாக முடங்கியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினா், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி

உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT