திருச்சி

சிறுமி பலாத்காரம் : காதலன் உள்ளிட்டோரிடம் விசாரணை

3rd May 2023 11:29 PM

ADVERTISEMENT

திருச்சியில், 17 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடா்பாக அவரது காதலன் உள்ளிட்ட சிலரிடம் மகளிா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமிக்கு வயிற்றுவலியால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை பெற்றோா் மருத்துவமனையில் சோ்த்தனா். சோதனையில் அவா் கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் பொன்மலை மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த கு.கணேசன் (23) என்ற இளைஞா் காதலிப்பதாக கூறி தன்னைப் பாலத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கணேசனின் நண்பா்கள் சிலரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT