திருச்சி

பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

28th Jun 2023 04:28 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என வேளாண்துறை உதவி இயக்குநா் மோகனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 14-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு தகுதிவாய்ந்த பயனாளி தங்களது சுயவிபரங்களை பிரதம மந்திரி கிசான் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். மேலும், பயனாளி விவசாயின் வங்கிக் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். இந்தப் பணிகளை விவசாயிகள் முடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது பொது சேவை மையம் அல்லது மணப்பாறை வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT