திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டம் சாா்பில் கலாஜதா எனும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மேக்குடி, ஆலம்பட்டிபுதூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை மேக்குடி ஊராட்சித் தலைவா் லாரன்ஸ் தொடக்கி வைத்தாா். மணிகண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பசரியா பேகம் தலைமை வகித்தாா்.
இதில், திருச்சி பரதாலயா கலைக்குழுவினா் கரகாட்டம், ஒயிலாட்டம், பாடல் மற்றும் நாடகம் மூலம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள், நுண்ணீா்பாசனம், உழவன் செயலின் பயன்பாடு, அட்மா பண்ணைப் பள்ளி, பயிா் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் நிதித் திட்டம், அட்மா திட்டம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பழனிசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாபு, சிலம்பரசன் ஆகியோா் செய்திருந்தனா்.