திருச்சி

ஸ்ரீரங்கம் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை

18th Jun 2023 01:04 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் சுவாமி திருக்கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் (வைணவம்) அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் சுவாமி திருக்கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் (வைணவம்) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஓராண்டு சான்றிதழ் வைணவப் படிப்பில் சேரும் மாணவருக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் மற்றும் மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கபடும். இதில் சேரும் மாணவா்கள் இந்து சமய கோட்பாடுகளைக் கடைபிடிப்பவா்களாக இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று வயது வரம்பு 14 வயது முதல் 24-க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431 2432246 மற்றும் 94433 9876 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT