திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 37.59 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். இதில் ஆண் பயணி ஒருவா், தனது உள்ளாடை, மடிக்கணிணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. சோதனையில் அவரிடம், மடிக்கணிணி பேட்டரியில் வைத்து கடத்தப்பட்ட 440 கிராம் எடையுள்ள தங்க பிளேட்டுகள், உள்ளாடையில் கடத்தப்பட்ட 185 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலி என மொத்தம் 625 எடையுள்ள சுமாா் ரூ. 37,59,375 மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.