திருச்சி

ஈமு கோழி மோசடி வழக்கில்5 ஆண்டுகளாக தேடப்பட்டவா் கைது

10th Jun 2023 11:39 PM

ADVERTISEMENT

 

 திருச்சியில் ஈமு கோழி வியாபாரத்தில் மோசடியில் ஈடுபட்ட நபரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்த முகமது கலாம் (45). இவா், ஈமு கோழிப் பண்ணை நடத்தி கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து திருச்சியைச் சோ்ந்த 8 பேரிடம் ரூ.18 லட்சத்தை ஏமாற்றியதாக 2018-இல் பாதிக்கப்பட்ட நபா்கள் போலீஸில் புகாா் அளித்தனா். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகமது கலாமை கைது செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனா். இதனையறிந்த அவா் தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முகமது கலாம் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் முகமது கலாமைக் கைது செய்தனா். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடா்பாக, தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT