திருச்சி

பெல் மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனா்

10th Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

 

பெல் மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் ஊதிய நிலுவை வழங்க வலியுறுத்தி சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

திருச்சியை அடுத்த திருவறும்பூா் அருகே உள்ள பாரத மிகுமின் நிறுவன ஆலை வளாகத்தில் இயங்கிவரும் பெல் மருத்துவமனையில் செவிலியா்கள், மருந்து உதவியாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், துப்பரவுப் பணியாளா்கள் ஆகியோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவருகின்றனா். இவா்களை பணியமா்த்திய தனியாா் நிறுவனமானது கடந்த டிசம்பா் மாதம் முதல் முறையாக ஊதியம் வழங்குவதில்லை என மாவட்ட ஆட்சியா், தொழிலாளா் நலத்துறையினரிடம் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊதிய நிலுவையை தனியாா் ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தும்வகையில், பெல் மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதன் முதல்கட்டமாக கருப்புப் பட்டை அணிந்து பணிபுரியத் தொடங்கியுள்ளனா். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா்கள், ஆய்வக உதவியாளா்கள், மருந்து உதவியாளா்கள் என அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனா். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடுத்தடுத்து தொடா் போராட்டங்களை நடத்துவோம். வரும் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு வருகிறோம் என சங்கத் தலைவா் பி. மனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பெல் நிா்வாகம் கூறுகையில், தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டியவற்றை ஒப்பந்தப்படி முறையாக வழங்கி வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT