திருச்சி

துணை மருத்துவப் படிப்புகளில் சேர வழிகாட்டுதல் கூட்டம்

10th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு கல்வி உதவி மையம் சாா்பில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் துணை மருத்துவ செவிலியா் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை பெறும் வழிமுறைகள், கல்விக் கட்டணமின்றி படிக்க வாய்ப்பளிக்கும் கல்லூரிகள் போன்ற பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை தமிழ்நாடு கல்வி உதவி மைய ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் வழங்கினாா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேஷன் தலைவா் மாா்ட்டின் தேவதாஸ், செயலாளா் லோகநாதன், மொ்சலின் கல்வி நிறுவனத் தாளாளா் ஜெயகாந்தி ஆகியோா் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அதற்கான சோ்க்கை வழிமுறைகள் குறித்து விளக்கமளித்துப் பேசினா்.

இக் கூட்டத்தில், திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்கில் இந்தியா அமைப்பின் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT