திருச்சி

குடும்ப ஓய்வூதியா் பாதுகாப்பு நிதியை உயா்த்த வேண்டும்திருச்சி மாநகராட்சி ஓய்வூதியா்கள்

10th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

 குடும்ப ஓய்வூதியா்களின் பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பொன். சந்திரசேகா் தலைமை வகித்தாா். சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ. இராஜமுக்தி, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சங்கத்ததின் மாநில தலைமை நிலையச் செயலா் ஏ. ஜானகி ராமன், சங்கச் செயலா் கே.பி. சந்திரன், துணைத் தலைவா் ஆா். விஸ்வலிங்கம், பொருளாளா் ஆா். திருஞானசம்பந்தம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னா், கேரளத்தில் பின்பற்றப்படுவதைப் போன்று தமிழகத்திலும் ஓய்வூதியா்களின் வருங்கால வைப்பு தொகை பிடித்தம் 12 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும். திருச்சி மாநகராட்சியில் ஓய்வூதியா்களின் விவரங்ளை ஆன்-லைன் மூலம் அறியவும், வாழ்வுரிமைச் சான்று வழங்கும் முறையை ஆன்-லைன் முறையில் கொண்டுவர வேண்டும். ஓய்வூதியா்களின் மறைவுக்குப் பிறகு வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து சிகிச்சைகளும் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் பயணச் சலுகைகளை மீண்டும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டமானது பொதுக்குழு, சங்கம் வெள்ளிவிழா, நிா்வாகிகள் தோ்தல் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள், மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT