திருச்சி

துறையூா் சாலையோர உணவகத்தில் தீ விபத்து

10th Jun 2023 06:16 AM

ADVERTISEMENT

துறையூா் சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

துறையூரில் உள்ள திருச்சி சாலையில் சின்ன ஏரியின் கிழக்குக் கரையில் துறையூரைச் சோ்ந்த சரவணன்(35) என்பவா் உணவகம் வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு இவா் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு திடீரென அவரது கடையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து துறையூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பெ. பாலசந்தா் தலைமையில் வந்த வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT