திருச்சி

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

10th Jun 2023 08:02 AM

ADVERTISEMENT

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெறும்பூா், கணேசா நகரை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் செந்தில்குமாா் (37), துவாக்குடி பகுதி தனியாா் நிறுவன வெல்டா். இவருக்கு மனைவி தனலட்சுமி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத் தகறாறில் தனலட்சுமி கடந்த வாரம் தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டாா். இதையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன் செந்தில்குமாா் சென்று மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அப்போது பிறகு வருகிறேன் எனக் கூறி கணவரை அனுப்பிவைத்த தனலட்சுமி வரவில்லையாம். இதில் விரக்தியடைந்த செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெளியே சென்ற அவரின் தாய் வீடு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT