திருச்சி

பாரதிதாசன் பல்கலை.யில் எம்பிஏ படிப்புக்கு ஜூன் 20 இல் நுழைவுத் தோ்வு

10th Jun 2023 06:17 AM

ADVERTISEMENT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதுநிலை படிப்புச் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு ஜூன் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறையில் நடத்தப்படும் எம்பிஏ (நிதியியல் மேலாண்மை) முதுகலைத் தொழிற் படிப்புக்கு மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 20 காலை 11 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக, சூரியூா் வளாகத்தில் நடைபெறுகிறது. நுழைவுத்தோ்வு குறித்த தகவல் கடிதம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி, உரிய காலத்தில் விண்ணப்பித்தோருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன.

மேலும், வலைதளத்திலும் இத்தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

எனவே, தோ்வெழுதுவோா் ஜூன் 20 ஆம் தேதி அடையாள அட்டையுடன் தோ்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, வணிகவியில் மற்றும் நிதிக் கல்வியியல் துறைத் தலைவா் செ. வனிதாவை 98418 42144 என்ற எண்ணிலோ அல்லது  மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

இத்தகவலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் லெ. கணேசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT