திருச்சி

பெரம்பலூரில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

9th Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் திரைப்பட இயக்குநா் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (40). திரைப்பட இயக்குநரான இவா் மீது பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவா் கடந்த ஜூன் 5 ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி, பெரம்பலூா் பாலக்கரை பகுதி தனியாா் நட்சத்திர உணவு விடுதி மதுக்கூடத்தில் மதுஅருந்தி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் செல்வராஜை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா். இது தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடினா்.

இந்நிலையில் இந்தக் கொலை தொடா்பாக பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவா் நகரை சோ்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவா், திருச்சி 1 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சரணடைந்தாா். அதைத் தொடா்ந்து பெரம்பலூா் வரகுபாடியை சோ்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (31), வியாழக்கிழமை மாலை திருச்சி 2ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து போலீஸாா் தன்ராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT