திருச்சி

காவல் துறையின் சிறப்புக் குறைதீா் முகாம் 283 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

8th Jun 2023 02:09 AM

ADVERTISEMENT

திருச்சியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் நாள் முகாமில் பொதுமக்கள் அளித்த 283 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு முதல்வா் வாரந்தோறும் புதன்கிழமைகளில், காவல்துறை சாா்பில் பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு குறைதீா் முகாம்களை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, பெரம்பலூா், அரியலூா்,கரூா், புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சரியான தீா்வு கிடைக்கப்பெற்ா எனக் கண்டறியும் வகையிலும் மாபெரும் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம், திருச்சி கேகே நகா் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி மு. சங்கா் (சட்டம் ஒழுங்கு) தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் எம். சத்திய பிரியா, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். சரவணசுந்தா், மாவட்டக் கண்காணிப்பாளா்கள் கே. சுஜீத்குமாா் (திருச்சி), இ. சுந்தரவதனம் (கரூா்), வந்திதா பாண்டே (புதுக்கோட்டை ), சி. சியாமளாதேவி (பெரம்பலூா்), மு. பெரோஸ்கான்அப்துல்லா (அரியலூா்), திருச்சி மாநகர துணை ஆணையா்கள் கே. ரேஷ்குமாா் (தலைமையிடம், எஸ். செல்வகுமாா் (தெற்கு) வி. அன்பு (வடக்கு) உள்ளிட்ட காவல் துறையினா் பலா் கலந்துகொண்டனா்.

முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்கள், மற்றும் திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, அரியலூா் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகத்தில் 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 283 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT