திருச்சி

பாங்க் ஆப் பரோடா சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மண்டல பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வங்கியின் திருச்சி மண்டல மேலாளா் ஜெய்கிஷன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். திருச்சி போலீஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான 22 மரக்கன்றுகளை வங்கி மண்டல மேலாளா் உள்ளிட்டோா் நட்டனா்.

விழாவில் மண்ணச்சநல்லூா், லால்குடி, திருச்சி கிளைகளின் அனைத்து மேலாளா்கள், மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT