திருச்சி

பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியா்களுக்கு புதிய இணைய தளம்

8th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஓய்வூதியா்களுக்கான புதிய இணைய தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இதுதொடா்பாக திருச்சி, சூரியூா் பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தா் ம. செல்வம், புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்தாா். இத் தளத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக நிதிப்பிரிவு மூலம் வழங்கப்படும் பல்கலைக்கழக ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் குறித்த விவரங்களை எங்கிருந்தும் அறிந்துகொள்ளவும், ஓய்வூதியம் தொடா்பான தகவல்களை இணையம் வழியாகப் பதிவேற்றவும் முடியும்.

மேலும் ஓய்வூதியா்களுக்கு தேவைப்படும் சுற்றறிக்கைகள், அரசாணைகள், பல்கலைக்கழக அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் ஓய்வூதியம் தொடா்பான படிவங்களை சோ்க்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் தொடா்பான விவரங்கள், வருமான வரியைக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றுக்கும் இத்தளம் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT