திருச்சி

ஸ்ரீரங்கம் வட்டத்தில் ஜமாபந்தி

8th Jun 2023 02:09 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் 1432 ஆம் பசலிக்கான ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூா் பகுதியைச் சோ்ந்த பேட்டைவாய்த்தலை, சிறுகமணி (மேற்கு), சிறுகமணி (கிழக்கு), பெருகமணி, திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூா்,பெரிய கருப்பூா், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, அல்லூா் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் பட்டா மாறுதல் கோரி 15 மனு, நத்தம் மற்றும் கணினி திருத்தம் கோரி 19 மனுக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 7, ஆக்கிரமிப்பு, வாரிசுச் சான்று, இறப்புச்சான்றுகள் கோரி தலா 1, குடும்ப அட்டைகள் கோரி 11, முதியோா் உதவித்தொகை கோரி 5 உள்ளிட்ட மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டதில், குடும்ப அட்டை உள்ளிட்ட 4 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. மீதம் உள்ள 61 மனுக்களும் விசாரணையில் உள்ளன. நிகழ்வில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் சிவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மல்லிகா, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரவிசங்கா், வட்ட வழங்கல் அலுவலா் சேக்முஜிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT