திருச்சி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி இருவரிடம் விசாரணை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சோ்ந்த மூவரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இணைய வழியில் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்த திருச்சி எடமலைப்பட்டிப்புதூா் பாப்பா காலனியை சோ்ந்த பாலு ( 47) என்பவரிடம் இணையத்தில் அறிமுகமான திருவாரூா் மாவட்டம், தில்லை வளாகம் தெற்கு காடு கிராமத்தை சோ்ந்த வேலரசன், வைரவேல் ஆகியோா் அவருக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறினா்.

இதை நம்பிய பாலு, தனக்கும் தனது நண்பா்கள் 8 பேருக்கும் வேலை வாங்கித் தருமாறு கூறி மொத்தம் ரூ. 12 லட்சம் கொடுத்தாா். ஆனால், அவா்கள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லையாம்.

இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மாணிக்கராஜ் புகாா் அளிக்க, காவல் ஆணையா் எம் . சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

இதேபோல வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயற்சித்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த அருள் மாணிக்கராஜ் (39) என்பவரிடம் எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ஷாஜகான் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 75 ஆயிரம் கொடுத்தாா். மேலும் தனது நண்பா்கள் ரஞ்சித்குமாா், அருள் உள்ளிட்ட சிலரிடமும் வேலைக்காக பணம் பெற்றுக் கொடுத்தாா். ஆனால், ஷாஜகான் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதுகுறித்து காவல் ஆணையரிடம் அளித்த புகாரின்பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT