திருச்சி

மாநகராட்சியின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

DIN

திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட தகவல்:

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கிவரும் பொது தரைமட்டக் கிணறு நீா் உந்து நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாயில் திருச்சி - சென்னை பிரதான சாலை பால்பண்ணை அப்பல்லோ மருத்துவமனை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்யும் பணிக்காக தேவதானம், விறகுப்பேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, சங்கிலியாண்டபுரம் புதியது மற்றும் பழையது, அரியமங்கலம் உக்கரை, தெற்கு உக்கடை, மகாலட்சுமி நகா் ஆகிய 11 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 8) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை வழக்கம்போல் குடிநீா் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT