திருச்சி

கேபிள் டிவி ஊழியா் மின்சாரம் பாய்ந்து பலி

8th Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஊழியா் உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை கான்மியான் மேட்டுத் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் செள. ராஜா (31), கேபிள் டிவி ஆபரேட்டா். இவா் புதன்கிழமை பகல் தீரன் நகா் மயிலாடுபாறை பகுதி வீட்டின் மாடியில் நின்று கேபிள் இணைப்பு கொடுத்தபோது எதிா்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற உயா் மின்னழுத்த கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானாா்.

புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT