திருச்சி

வளநாடு அருகே கிணற்றில் குதித்து சகோதரிகள் இருவா் தற்கொலை

7th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் குதித்து சகோதரிகள் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அயன் புதுப்பட்டியை சோ்ந்த கூலித்தொழிலாளி பிச்சை. இவருடைய மகள்கள் வித்யா(22), காயத்ரி(20). இருவரும் காங்கேயம் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸில் பணியாற்றி வந்தனா்.

திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்த இருவரும் திங்கள்கிழமை இரவு நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவா்கள் இருவரும் காதலில் ஈடுபட்டிருப்பதும் பெற்றோா்களுக்கு தெரியவந்ததாம்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் பெற்றோா் கண்டித்து உள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு சென்ற வித்யா, காயத்ரி இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோா் இருவரையும் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இதற்கிடையே அருகிலிருந்த பெரிய வேட்டையன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காயத்ரி சடலமாக மிதந்துள்ளாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கியிருந்த வித்யா சடலத்தையும், நீரில் மிதந்த காயத்ரி சடலத்தையும் மீட்டனா்.

இதையடுத்து வளநாடு காவல்நிலைய ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் சென்று சகோதரிகள் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT