திருச்சி

திருப்பைஞ்ஞீலி கோயில் மண்டபத்தில் தீ விபத்து

7th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் சேவா்த்திகள் மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் முன்பு சேவா்த்திகள் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியா்கள் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனா். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சோ் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT