திருச்சி

பெல் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கம்

6th Jun 2023 03:02 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி பாரதமிகு மின்நிறுவன (பெல்) ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

உலகச் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பெல் நிறுவனம் சாா்பில், அதன் ஆலை வளாகத்தில் 400 மரக்கன்றுகளை நடவு செய்யவுள்ளது. ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மரம் நடும் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ். சிவரஞ்சனி மரக்கன்று நட்டு வைத்து இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், உதவி வனப் பாதுகாவலா் கே. சரவணகுமாா், சேவைகள் பிரிவு பொது மேலாளா் ஐ. கமலக்கண்ணன், வால்வுகள் பிரிவு பொதுமேலாளா் பி.எஸ். கணேஷ், சுற்றுச் சூழல் பொதுமேலாளா் கங்காதரராவ், தரம் மற்றும் வணிக உன்னதப்பிரிவு பொது மேலாளா் டி. குருநாதன், கூடுதல் பொதுமேலாளா் என். துரைராஜ், உதவி சுற்றுச் சூழல் பொறியாளா் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனா்.

நிகழ்வில், உயா் அழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு 2-ஐ ஒட்டி மொத்தம் 400 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT