திருச்சி

அழிந்து வரும் நாட்டு மரங்களை மீட்டுருவாக்க 1 கோடி மரக்கன்றுகள் வளா்ப்பு

6th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

அழிந்து வரும் நாட்டு மரங்களை மீட்டுருவாக்கவும், பசுமைப் போா்வையை உருவாக்கும் முயற்சியாக 1 கோடி மரக்கன்றுகள் வளா்க்கும் பணியில் திருச்சி மாவட்ட நிா்வாகம் களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக சனமங்கலத்தில் 86 ஏக்கரில் நா்சரி பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட சனமங்கலம் ஊராட்சியில் 86 ஏக்கரில் நா்சரி பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் 1 கோடி மரக்கன்றுகள் வளா்க்கப்படவுள்ளன. இதற்கான விதைகளை தூவி நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கலந்து கொண்டு விதைகளை தூவி நாற்றாங்கால் உருவாக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் தவச்செல்வம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மல்லிகா, சனமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஹேமலதா ஆகியோா் பங்கேற்று விதைகளை தூவினா்.

இதுதொடா்பாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரணி கூறுகையில், அழிந்து வரும் நாட்டு மரங்களை காக்கும் வகையில் 108 அரிய வகை மரங்கள் உள்பட பல்வேறு மரக்கன்றுகளை வளா்த்தெடுத்து திருச்சி மாவட்டம் முழுவதும் நடவு செய்ய ஆட்சியா் முன்மாதிரியாக முயற்சி எடுத்துள்ளாா். ஓராண்டுக்குள் இந்த கன்றுகள் வளா்க்கப்படும். சுமாா் மூன்று அடி வரை வளா்ந்தவுடன் அவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்படும். நகரம், கிராமங்கள், நீா்நிலைகளின் கரைப்பகுதிகள் என பரவலாக 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்டவுள்ளன. அடுத்தாண்டு அக்டோபா் மாதம் நடவு செய்யும் பணி தொடங்கும். பருவமழை தொடங்கும் முன்னதாக நடவு செய்தால் மரக்கன்றுகள் வளர மழையும் கை கொடுக்கும். அதற்கேற்ப திட்டப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT