திருச்சி

மிரட்டலுக்காக வருமான வரிசோதனை நடத்தப்படவில்லை

6th Jun 2023 03:03 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மிரட்டலுக்காக வருமானவரி சோதனை நடத்தப்படவில்லை என பாஜக மூத்தத் தலைவா் ஹெச்ா. ராஜா தெரிவித்தாா்.

திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மக்கள் தொடா்பு இயக்கம் மே 30 முதல் ஜூன் 30 வரை நடைபெற உள்ளது. ஒடிஸா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. தொடா்ந்து 34 மாதங்கள் ரயில் விபத்தில்லாமல் இருந்த நிலையில், தற்போதைய விபத்து எதிா்பாராதவிதமாக நடந்துள்ளது. விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, திருச்சி வாளாடி அருகே ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 போ் உயிரிழந்தபோது அமைச்சரையும், மாநில முதல்வரையும் பதவி விலகக் கோரி கேட்காதவா்கள், ஒடிஸா ரயில் விபத்தில் மட்டும் ரயில்வே அமைச்சரையும், பிரதமா் மோடியையும் பதவி விலகக் கேட்கின்றனா்.

அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினா்களிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை தொடா்பாக திமுக மூத்த அமைச்சா்கள் யாரும் கருத்து கூறவில்லை. உறுதி செய்யப்பட்ட தகவலின் பேரில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் மிரட்டலுக்காக வருமானவரித்துறை சோதனை நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிலா் தலையிட்டு அரசியலாக்க முனைகின்றனா். வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியிலிருந்து யாரும் வெளியேறமாட்டாா்கள். புதிதாக பலா் வரலாம் என்றாா் எச். ராஜா.

முன்னதாக, பாஜக அரசின் சாதனைகளை எச். ராஜா பட்டியலிட்டாா். இந்த சந்திப்பின்போது, பாஜக மாவட்டத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT