திருச்சி

லால்குடி அருகே ரயிலை கவிழ்க்க சதி?மோப்ப நாய் உதவியுடன் விசாரணை

6th Jun 2023 02:58 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயா்கள் கிடந்த சம்பவத்தில் தனிப்படை போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

ஜூன் 2 ஆம் தேதி கன்னியாகுமரி விரைவு ரயில் சென்னை சென்றுகொண்டிருந்தபோது லால்குடி அருகே மேலவாளாடி ரயில்வே சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தில் கனரக வாகனங்களின் 2 டயா்கள் கிடந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக வந்த ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின் கீழ் லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஜய்தங்கம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றிய லாரி டயா்கள் இரண்டையும், மோப்ப நாய் லீலி உதவியுடன் சோதனை நடத்தினா். அப்போது, மோப்ப நாய் லீலி சம்பவ இடத்திலிருந்து ஓடி திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலை மேம்பாலம் அணுகுசாலை பகுதியில் உள்ள விநாயகா் கோயில் முன் படுத்துக் கொண்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT