திருச்சி

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 422 மனுக்கள்

6th Jun 2023 03:03 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 76 மனு, குடும்ப அட்டை கோரி 35, உதவித் தொகை கோரி 92, வேலைவாய்ப்பு கோரி 54, அடிப்படை வசதிகள் கோரி 43 மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 422 மனுக்கள் வந்திருந்தன. இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் என். செல்வம், மறுவாழ்வு முகாம் மண்டல துணை ஆட்சியா் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏழுமலை, மாற்றுத்திறனாளிகள் அலுவலா் சந்திரமோகன் மற்றும் பல்வேறு துறை மாவட்ட நிலை அலுவலா்கள், போலீஸாா், தீயணைப்புத்துறை, வனத்துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT