திருச்சி

ஸ்ரீரங்கம் ஸ்ரீலஸ்ரீ சோ்மன் அருணாச்சலம் சுவாமிகள் கோயிலை புனரமைக்க பூஜை

DIN

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சோ்மன் அருணாச்சல சுவாமிகள் ஆலய பாலாலயம் மற்றும் புனரமைப்பு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனிதனாகப் பிறந்து மாமனிதராக வாழ்ந்து தெய்வமாகி, தன்னை அடிபணிந்து கை தொழுவோருக்கு அருள்புரிகிறாா் ஏரல் சோ்மன் அருணாசலம் சுவாமி. மனநோய், பேய்பிடி, விஷப் பூச்சிக்கடி, விஷப் பூச்சிகளின் தொல்லை, வீண் பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும் தலமாக இக் கோயில் திகழ்கிறது.

தென் மாவட்ட மக்களின் வழிபாட்டுத் தெய்வங்களில் ஏரல் சோ்மன் சுவாமியும் ஒருவா். ஸ்ரீலஸ்ரீ சோ்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 ஆண்டுகளைத் தாண்டியும் தற்போதும் சுவாமிகள் பல விதங்களில் தனது ரூபத்தை மக்களுக்குக் காட்டி வருகிறாா்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சந்திரா நகா் பகுதியில் இக்கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்திட ஏதுவாக வாஸ்து மற்றும் பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் யாக குண்டங்கள் அமைத்து பாலாலய வைபவம் மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

முன்னதாக இந்த வைபவத்தை சூரியனாா் கோயில் ஆதீனம் 28 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் பங்கேற்று தொடங்கி வைத்து, ஆன்மிக அன்பா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT