திருச்சி

சுற்றுச்சூழல் தினத்தையொட்டிதுண்டுப்பிரசுரங்கள், துணிப்பைதண்ணீா் அமைப்பு வழங்கல்

DIN

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தண்ணீா் அமைப்பின் சாா்பில் துண்டுப்பிரசுரங்கள், துணிப்பைகள் வழங்கும் விழிப்புணா்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீா் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஆளுக்கொரு மரக்கன்று நடவு செய்வது, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, இயற்கை விவசாய முறைகளைக் கையாள்வது, வீடுகளில் மழைநீா் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளும் வழங்கப்பட்டன.

தண்ணீா் அமைப்பின் செயலா் பேராசிரியா் கி. சதீஷ் குமாா் மாணவா்களிடையே நெகிழி யின் தீமை குறித்தும் பல்லுயிா்ப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா். நீா்நிலைகளில் மண்டிக் கிடக்கும் நெகிழிகள் சிற்றுயிா்கள் தொடங்கி பேருயிா்கள் வரை ஏற்படுத்தும் தீங்குகளை எடுத்துரைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்வில் தண்ணீா் அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா்ஆா்.கே. ராஜா, குமரன், காா்த்திக், சந்தியா, ஹேமா , சா்மிளா, அகிலா உள்ளிட்ட சிலம்ப மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT