திருச்சி

வசந்த உற்சஸ விழா: தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா

5th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

 

வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தாா்.

இக்கோயிலில் 9 நாள்கள் நடைபெறும் வசந்த உற்சஸவ விழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருவாா். அங்கு அலங்காரம், அமுது செய்து சூா்ணாபிஷேகம் கண்டருளுவாா். பின்னா் இரவு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவாா்.

விழாவின் 7 ஆம் நாளான 2-ஆம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் கோயில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா். விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளினாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை அடைந்தாா். அங்கு இரவு 8.30 முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினாா். பின்னா் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்புக் கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா். ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT